சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சியின் மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்ஆர் விஜயகுமார், துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் மணிமாறன், கழகத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் சிங்கை ராமச்சந்திரன், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கோவை சத்யன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.