சென்னை: தமிழ்நாட்டிற்கு வரும் 27ம் ேததி வருகை தரும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட எக்ஸ்தளப் பதிவு: வரும் 27ம் தேதி தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும். ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அமித்ஷாவை கண்டித்து 27ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.