புதுடெல்லி: அரசின் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவின் பருவநிலையை கண்காணித்து ஆய்வு செய்யும் என்ஓஏஏ அமைப்பில் விஞ்ஞானிகள், வானிலை ஆய்வாளர்கள் பலரை அதிபர் டிரம்ப் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் பருவநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் உள்ளிட்டோர் கூறுகையில், ‘‘இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். என்ஓஏஏ என்பது வெறும் அமெரிக்க பிரச்னை மட்டுமல்ல.
இந்த அமைப்பு, உலகளாவிய வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலைக்கான தரவு மற்றும் மாதிரிகளை வழங்குகிறது. இந்திய பெருங்கடலின் கண்காணிப்பு கட்டமைப்பில் பெரும்பாலான பகுதி என்ஓஏஏயை நம்பியிருக்கிறது. எனவே இதன் தரவுகள் ஒருங்கிணைப்பு குறைப்பால் இந்தியாவில் வெள்ளம், வெப்ப அலைகள், புயல்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கைகள் பலவீனமடையும் ’’ என்றனர்.
The post அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் ஆட்குறைப்பால் இந்தியாவின் புயல், வெள்ளம் கண்காணிப்பை பாதிக்கும்: விஞ்ஞானிகள் வேதனை appeared first on Dinakaran.