புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ஆதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா முதல்வராகப் பொறுப்பேற்றார்.