டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னை ஐஐடி இன்வென்டிவ் 2025′ (IInvenTiv 2025) கண்காட்சியை இன்றும் நாளையும் நடத்துகிறது. இதில், தரவரிசையில் இடம்பெற்ற 50 முதன்மைக் கல்வி நிறுவனங்களின் புது கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க மறுத்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னைக்கு வந்தால் அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் தான் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக செய்யப்பட்டது. அவருக்குப் பதிலாக ஒன்றிய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்றார். அதே சமயம் ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ‘வணக்கம்’ என்று தமிழில் வாழ்த்தி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி வழியே தனது பேச்சை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர்,இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது என புகழாரம் சூட்டியவாறு பேசியது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம் appeared first on Dinakaran.