டெல்லி : சட்ட விரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ரயில்வேயில் போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிக்கெட் கவுண்டர்களின் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஒரே நேரத்தில் பெருவாரியான டிக்கெட்டுகளை எடுப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில் சட்ட விரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 4,975 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் 53 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சத்து 24, 529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தட்கல் மற்றும் பல்க் புக்கிங்கில் முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்து, 26,442 இணையதள ஐடிக்கள் முடக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியா முழுவதும் சட்ட விரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு; 4,975 பேர் கைது appeared first on Dinakaran.