டெல்லி: கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் குளிர்பான சந்தையில் அனல் பறக்கும் போர் நடைபெற்று வருகிறது. ரிலையன்ஸ் ஒரு துறையில் கால் பாதிக்கிறது என்றாலே அத்துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களுக்கு அச்சம் ஏற்படும். சந்தையை பிடிக்க மலிவுவிலை உள்ளிட்ட கவர்ச்சியான திட்டங்களை அறிவிப்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் வழக்கம். உதாரணமாக தொலைத்தொடர்பு துறையை கால் பதித்த விதத்தை கூறலாம். இலவசமாக இணைய சேவையை வழங்கி சந்தையின் பெரும் பங்கை தற்போது கையில் வைத்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. அதே போல தான் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் தனது தயாரிப்பான புதிய கேம்ப கோலா எனர்ஜி பானங்களின் விலையை அதிரடியாக ரூ.10 ஆக குறைத்து நிர்ணயித்துள்ளது.
இது இந்தியாவின் குளிர்பான சந்தையையே அசைத்து பார்க்க கூடிய வகையில் வியாபார போரை உருவாக்கி உள்ளது. இதனால் உள்நாட்டில் பழங்களை அடிப்படையாக கொண்டு பானங்கள் டாபர், ஐ.டி.சி போன்ற நிறுவனங்களும் விலையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விற்பனையை தொடங்கி உள்ளது. சர்வதேச சந்தையை பிடிக்க தனது உத்திகளை ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் கையாளும் என்பதால் கோகோ கோலா, பெப்சி போன்ற சர்வதேச பிராண்டுகளும் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் மொத வர்த்தகத்தில் மார்ச் முதல் ஜூன் வரை 60 முதல் 65 சதவீதம் விழுக்காடு விற்பனை நடக்கும் என்பதால் சீசனை தவறவிட நிறுவனங்கள் விரும்பாது என தொழில் துறையினர் கூறுகின்றனர்.
The post இந்தியாவின் குளிர்பான சந்தையில் அனல் பறக்கும் விலை போர்: கேம்ப கோலாவின் விலையை ரூ.10ஆக நிர்ணயித்துள்ள ரிலையன்ஸ் appeared first on Dinakaran.