புதுடெல்லி: இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்கின் அதிவேக இணையச் சேவைகளை வழங்குவதற்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்சுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவில் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அடிப்படையிலான சேவைகளை விற்பதற்கான அங்கீகாரத்தை ஸ்பேஸ்எக்ஸ் பெறுவதற்கு உட்பட்டது என்று ஏர்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களை ஸ்டார்லிங்க் எவ்வாறு ஏர்டெல்லின் சலுகைகளை முழுமையாக்கலாம் மற்றும் விரிவுபடுத்தலாம் என்பதையும், இந்திய சந்தையில் ஏர்டெல்லின் நிபுணத்துவம் எப்படி ஸ்பேஸ்எக்ஸ் வாடிக்கையாளர்களுக்கும் வணிகங்களுக்கும் நேரடியாக வழங்க முடியும் என்பதையும் ஆராய உதவும் என்று பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான கோபால் விட்டல் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,’ இந்தியாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் சேவைகளை வழங்க ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்க மைல்கல். அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இணைப்பிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது’ என்றார்.
The post இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் வழங்க ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைகிறது ஏர்டெல் appeared first on Dinakaran.