உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சாஸ்திரி பாலத்தின் கீழ் உள்ள பந்தலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புனித நீராட திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் கூடிய நிலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கூடாரத்தில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்களும் முற்றிலும் எரிந்தன. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
The post உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.