உத்தரகாண்ட்: உத்தராகண்டின் அரசு ஊழியர்கள் மாதம் ரூ.5,000 மேல் செலவு செய்யும் பட்சத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என மாநில அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதை “அபத்தமானது” என விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் இன்றைய பணவீக்க காலத்தில் அன்றாட செலவுகளுக்கே இந்த வரம்பு போதாது என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
உத்தரகாண்ட்டில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான், அம்மாநில அரசு ஊழியர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளது. இதற்கு கடந்த 14ம் தேதி உத்தரகாண்ட் அரசு போட்ட உத்தரவு தான் காரணம். அதாவது அரசு ஊழியர்கள் அதிகளவில் சொத்து வாங்கி குவிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. மேலும் அதுதொடர்பான அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதுதான் அரசு ஊழியர்களின் கோபத்துக்கு முக்கிய காரணமாகும்.
உத்தரகாண்ட் அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛எந்த அரசு ஊழியர்களாக இருந்தாலும் கூட தங்களின் ஒரு மாத ஊதியம் அல்லது ரூ. 5,000-ஐ விட அதிகமான மதிப்புள்ள எந்தவொரு அசையும் சொத்தையும் விற்பனை செய்தாலோ அல்லது சொத்து, பொருட்களை வாங்கினாலோ, அல்லது வேறு வழியில் பணப்பரிவர்த்தனை செய்தாலோ அதுபற்றி உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறுை அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அசையா சொத்துகளை தானமாக கொடுத்தாலும் அரசிடம் தெரிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தான் அரசு ஊழியர்களை கோபப்படுத்தி உள்ளது.
The post உத்தராகண்ட் அரசின் புதிய உத்தரவால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி: ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரியின் அனுமதி கட்டாயம்! appeared first on Dinakaran.