இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கருத்து பொறுப்பற்றது. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாகிஸ்தானின் பாரம்பரிய பாதுகாப்பு வழிமுறைகள் மீது இந்தியாவுக்கு உள்ள ஆழ்ந்த விரக்தியையே இது வெளிப்படுத்துகிறது. ‘அணுசக்தி அச்சுறுத்தல்’ இருப்பதாக இந்தியா கூறுவது, அது தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் துயரம்.