புதுடெல்லி: ஒன்றிய அரசின் அலுவல் மொழித்துறையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா, “இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன். இந்தி எந்தவொரு இந்திய மொழிக்கோ அல்லது வௌிநாட்டு மொழிகளுக்கோ எதிரி கிடையாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, “அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம், பொறியியல் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒருவரின் சொந்த மொழியை போற்றுவதற்கான, பேசுவதற்கான தூண்டுதல் இருக்க வேண்டும்.
நாட்டை பொறுத்தவரை மொழி என்பது வெறும் ஊடகமல்ல. அது தேசத்தின் ஆன்மா. இந்திய மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதும், அதை வளப்படுத்துவம் முக்கியம். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளையும், குறிப்பாக அலுவல் மொழிகளை வளப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நிர்வாக பணிகளை மேற்கொள்ள இந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உதவும்” என்று தெரிவித்தார்.
The post எந்த மொழிக்கும் எதிரி கிடையாது இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன்: அமித் ஷா கருத்து appeared first on Dinakaran.