பெங்களூரு: கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் ஒருவர், தனக்கு பாஸ் போடுமாறு எழுதிவைத்து, அதற்கு லஞ்சமாக ரூ.500 வைத்திருந்த சம்பவத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. கர்நாடகாவில் எஸ்.எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வு நடந்து முடிந்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்துவருகிறது. பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் உள்ள நிப்பாணி விடைத்தாள் திருத்தும் மையத்தில் மாணவர் ஒருவர், விடைத்தாளில் ரூ.500 நோட்டை வைத்து, ’எப்படியாவது என்னை பாஸ் பண்ணி விடுங்க; இல்லையென்றால் என் காதல் தோல்வியடைந்துவிடும்.
நான் எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்த பிறகுதான் அந்த பொண்ணு என்னை காதல் செய்வாங்க. நான் காதலிக்கும் பெண் நான் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என்னை காதலிப்பேன் என்று கூறிவிட்டார். எனவே இந்த ரூ.500-ஐ டீ செலவிற்கு வைத்துக்கொண்டு என்னை பாஸ் போட்டுவிடுங்கள்’ என்று எழுதியிருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
The post ‘என் காதல் உங்கள் கையில்’ ரூ.500 எடுத்து கொண்டு பாஸ் போட்டு விடுங்க: 10ம் வகுப்பு மாணவரின் செயல் இணையத்தில் வைரல் appeared first on Dinakaran.