சென்னை: ‘அமெரிக்காவில் இருக்கும் அதானி வழக்குக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை' என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் விவாதம் நடைபெற்றது.