புதுடெல்லி: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை வழங்கப்பட்டது தொடர்பாக உடனடியாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் பேசியதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம் மோகன் நாயுடு, "இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் உடனடியாக ஏர் இந்தியாவிடம் பேசினோம். தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். எங்கள் தரப்பில் இருந்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் இது தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக சிவராஜ் சிங் சவுகானிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன்" என தெரிவித்துள்ளார்.