புதுடெல்லி: ஓலா, உபர் போன்ற ஆன்லைன் வாடகை ஆட்டோ, டாக்ஸி பதிவு நிறுவனங்கள் ஆன்ட்ராய்டு போன்களை விட ஐபோன்களில் அதிக கட்டணத்தை காட்டுவதாக பயனர்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த புகார்கள் தொடர்பாக ஓலா, உபர் நிறுவனங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயன்படுத்தும் பயனர்களுக்கு, ஐஓஎஸ் இயங்குதளத்தின் புதுப்பிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த புதுப்பிப்புகளுக்கு பிறகு ஐபோனில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டிருப்பதாக பயனர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 60 சதவீத ஐபோன் பயனர்கள் சேவையில் சிக்கல்களை சந்தித்ததாகவும், குறிப்பாக அழைப்புகளை மேற்கொள்ள முடியாதது முக்கிய பிரச்னையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
The post ஐ போன் பயன்படுத்துவோருக்கு கூடுதல் கட்டணம் ஓலா, உபருக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் appeared first on Dinakaran.