டெல்லி: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. ஐ.ஏ.எஸ்.,ஐ .எஃப்.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு இறுதி முடிவுகள் வெளியாகின. யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி நடைபெற்றது. யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
UPSC நேர்காணல்கள் ஜனவரி 07, 2025 முதல் ஏப்ரல் 17, 2025 வரை நடைபெற்றது. UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2845 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதன் பின்னர், UPSC இன்று அதாவது ஏப்ரல் 22, 2025 அன்று upsc.gov.in இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 1009 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. 2024 ஆம் ஆண்டு UPSC தேர்வுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1009 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் தமிழ்நாட்டின் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். தேசிய அளவிலான தரவரிசையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் 23ம் இடம் பிடித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் பயிர்சி பெற்ற மோனிகா தேசிய அளவில் 39வது இடம் பிடித்துள்ளார். தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் காமராஜ், சங்கரபாண்டியன் ஆகியோரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தில் முழு நேர பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
The post ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகின..! appeared first on Dinakaran.