வரும் நிதியாண்டில் சிறைச்சாலைகளை நவீனமயமாக்குவதற்காக ரூ.300 கோடி ஒதுக்குவதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். கடந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டிலும், சிறைகள் நவீனமயத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது பின்னர் ரூ.75 கோடியாக குறைக்கப்பட்டது. அதற்கு முந்தைய நிதியாண்டில்(2023-24ல்) ரூ.86.05 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டை போல இந்த ஆண்டு பின்னர் ஒதுக்கீடு குறைக்கப்பட்டு, சிறைகள் நவீனமய திட்டம் கிடப்பில் போடப்படுமா? அல்லது திட்டமிட்டபடி பணிகள் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். கடந்த மே 2023 இல், உள்துறை அமைச்சகம் உயர் பாதுகாப்பு சிறை, திறந்தவெளி சிறைச்சாலையை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல் மற்றும் ‘‘கடினமான குற்றவாளிகள் மற்றும் பழக்கமான குற்றவாளிகளின் குற்றச் செயல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்தல்” உள்ளிட்ட விதிகளைக் கொண்ட ஒரு விரிவான ‘மாதிரி சிறைச்சாலைகள் சட்டத்தை’ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய பட்ஜெட் 2025-26: ஒரு ரூபாயில் வரவு செலவு (பைசாவில்)
* வரவு
கடன் மற்றும் இதர பொறுப்புகள் 24
பெரு நிறுவன வரி 17
சுங்க வரிகள்
வருமானவரி
ஒன்றிய கலால் வரி
ஜிஎஸ்டி, இதர வரிகள்
வரி அல்லாத வருவாய்
கடன் சாராத மூலதன வருவாய்
* செலவு
ஒன்றிய நிதிப் பங்களிப்புத் திட்டங்கள்
ஒன்றிய திட்டங்கள்
கடன்களுக்கான வட்டி
பாதுகாப்பு
மானியங்கள்
நிதிக்கமிஷன் மற்றும் இதர பரிமாற்றங்கள்
மாநிலங்களுக்கான வரிப் பங்களிப்பு
ஓய்வூதியம்
இதரச் செலவினங்கள்
* திருத்திய வருமான வரி தாக்கல் செய்ய 4 ஆண்டு அவகாசம்
திருத்திய வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2ல் இருந்து 4 ஆண்டாக உயர்த்தப்பட உள்ளது. குறிப்பிட்ட சில நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கல்விக் கடனுக்கு, நிகழ்விடத்தில் வசூலிக்கப்படும் வரியில் (டிசிஎஸ்) விலக்கு அளிக்கப்படும். மூத்த குடிமகன்களின் முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது; வாடகை வருவாய் மீதான டிடீஎஸ் வரி விலக்கு ரூ. 6 லட்சமாக உயர்த்தப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
* 25 தாதுப்பொருளுக்கு இறக்குமதி வரி விலக்கு
25 முக்கிய தாதுப்பொருட்கள் மீதான இறக்குமதி வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் 25 முக்கியமான தாதுப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். லித்தியம், இரும்பு பேட்டரிகள் ஸ்கிராப், கோபால்ட் பொருட்கள், லிட், துத்தநாகம் உட்பட 12 முக்கிய தாதுக்களுக்கு சுங்க வரியில் இருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவற்றில் இரண்டுக்கு அடிப்படை சுங்கவரியை குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்து. இது தாதுப்பொருட்களை பதப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
* யானைகள் மற்றும் புலிகளை பாதுகாக்க ரூ. 290 கோடி
சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு, 9 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறைக்கு நடப்பு 2025-26 நிதியாண்டில் ரூ. 3,125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகம். தற்போதுள்ள காடுகளை பாதுகாக்கவும், காடுகளின் பரப்பளவை விரிவுபடுத்தவும், காட்டுத் தீ போன்ற நிகழ்வுகளை தடுக்கவும் தேசிய பசுமை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ. 220 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்நிலை சுற்றுச்சூழல் பணிகளுக்காக வரும் நிதியாண்டில் ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. யானைகள் மற்றும் புலிகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ. 1167 கோடி
ஒன்றிய பட்ஜெட்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ரூ. 13,611கோடி நிதியை பெற்றுள்ளது. 2024-2025ம் ஆண்டில் இந்த துறைக்கான திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 10,026கோடியாக இருந்தது. தற்போது பட்ஜெட்டில் 35.75சதவீதம் நிதி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறையான 2024-2025ம் ஆண்டு நிதியாண்டை காட்டிலும் 9.22 சதவீத அதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ளது. இந்த துறைக்கு 2025-2026ம் நிதியாண்டுக்கு ரூ. 1167.27கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* கிசான் கடன் அட்டை உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு
ஒன்றிய நிதியமைச்சர் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், “விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிசான் கடன் அட்டை மூலம் தற்போது ரூ. 3 லட்சம் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 7.7 கோடி விவசாயிகள் பலனடைவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* லித்தியம் பேட்டரி சுங்க வரி விலக்கு
மின்சார வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன பேட்டரிகளின் 35 கூடுதல் மூலப்பொருட்களும், செல்போன் பேட்டரிகளின் 28 கூடுதல் மூலப்பொருட்களும் விலக்கு அளிக்கப்பட்ட மூலப்பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இது, செல்போன் மற்றும் மின்சார வாகனங்கள் இரண்டிற்குமான லித்தியம் அயன் பேட்டரிகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு, உற்பத்தி செலவை குறைத்து, இத்துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் என தொழில் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
* தலைவர்கள் கருத்துமக்களின் பட்ஜெட்
மக்களின் கையில் அதிக பணத்தை அள்ளி வழங்கி உள்ள இந்த பட்ஜெட் மக்களின் பட்ஜெட். வருமான வரிச் சலுகைகளால் நடுத்தர, மாத சம்பளம் வாங்குவோர் மகிழ்வார்கள். இதனால் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரிக்கும். பொருளாதாரம் வளரும். – பிரதமர் மோடி
* குண்டு காயத்துக்கு பிளாஸ்திரி
நாடு சந்திக்கும் பொருளாதார பிரச்னைகளுக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வு இல்லை. துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரி ஒட்டி சிகிச்சை அளிப்பது போல் பட்ஜெட் பரிந்துரைகள் உள்ளன. -எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
* எல்லாமே அரசியல்தான்
நாட்டின் நலன், மக்களின் நலனைவிட இந்த பட்ஜெட்டில் பாஜவின் அரசியல் நலன்தான் அதிகம் தலை தூக்கி உள்ளது. இந்த ஆட்சியில் சாதாரண மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. வளர்ச்சியடைந்த பாரதத்தில் சாதாரண மக்களுக்கும் இடம் தர வேண்டும். -பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி
* ஏமாற்றம் தரும் பட்ஜெட்
பெரும் கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடியை நிறுத்திவிட்டு, அந்த பணத்தை நடுத்தர மக்கள், விவசாயிகள் நலனுக்காக செலவிட வேண்டும் என்ற அறிவிப்பு இடம் பெறாததால் இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். – டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்
* மக்களை ஏமாற்ற முயற்சி
கடந்த 10 ஆண்டில் நடுத்தர மக்களிடம் இருந்து ரூ. 54 லட்சம் கோடியை வருமானவரியாக வசூலித்து விட்டு இப்போது, சலுகைகளை தருவதுபோல் ஏமாற்றுகிறார்கள். – காங்கிரஸ் தலைவர் கார்கே
* வளர்ச்சிக்கான புளூபிரின்ட்
இந்தியாவை ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியடைந்ததாக மாற்ற மோடி அரசு வகுத்துள்ள புளூபிரின்ட்தான் இந்த பட்ஜெட். அனைத்து தரப்பினருக்கும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் உள்ளன. -ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா
The post ஒன்றிய பட்ஜெட் 2025 சிறைகள் நவீனமயத்துக்கு ரூ. 300 கோடி: இந்த ஆண்டாவது பணிகள் நடக்குமா? appeared first on Dinakaran.