கோவை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயல் என கோவையில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோவை திருச்சி சாலை, சுங்கம் அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்தவர் இரா.மோகன்(81). திமுகவைச் சேர்ந்த இவர், கடந்த 1980-84-ல் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், கடந்த 1989-1991 வரை சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். திமுகவில், மாநில கொள்கை பரப்புச் செயலாளர், மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த இவர், வயோதிகம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். அன்றைய தினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.