போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜன.27ல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ெதாண்டர்களுக்கு அழைப்புவிடுத்து மபி மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி விடுத்துள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியில் குழு அரசியல், கோஷ்டி பூசல் என்ற புற்றுநோய் உள்ளது. ஒன்று இந்த கோஷ்டி புற்றுநோய் ஒழிய வேண்டும் அல்லது அழிய வேண்டும். இதை நாம் ஒழிக்காவிட்டால் அழிந்து விடுவோம்.
அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் மபியில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதே எனது விருப்பம். காதில் கிசுகிசுப்பவர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் கட்சிப் பதவிகளில் அமர்ந்திருக்கும் பொறுப்புள்ளவர்கள் கிசுகிசுப்பவர்களிடமிருந்து விலகி இருந்தால் பாதி நோய் தானே போய்விடும் இவ்வாறு பேசினார்.
The post ஒழிக்காவிட்டால் அழிந்துவிடுவோம்… கோஷ்டி அரசியல் செய்வது காங்கிரசின் புற்றுநோய்: மபி தலைவர் ஆவேசம் appeared first on Dinakaran.