கோவை: கிங்ஸ்டன் படம் கடலுக்கு அடியில் எடுத்துள்ளதால் இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
கிங்ஸ்டன் படத்தின் கதாநாயகனும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கோவை புரோசோன் மாலில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது: “தூத்துக்குடியில் உள்ள மீனவ கிராமத்தின் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்திய சினிமாவில் பார்க்காத விஷயம் இந்த படத்தில் அமைந்துள்ளது. மார்ச் 7-ம் தேதி வெளியாக இருக்கும் கிங்ஸ்டன் திரைப்படம் ஒரு திகில் சாகச படம்.