பெங்களூரு: கர்நாடகாவில் சம்பள உயர்வு கோரி அடுத்த மாதம் 5ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கர்நாடகாவில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் உள்பட 4 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 1.50 லட்சம் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது.
இதையடுத்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு பலமுறை போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவற்றை அம்மாநில அரசு நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இந்நிலையில் இதுபற்றி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி காலை 6 மணியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ேபாக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
The post கர்நாடகாவில் சம்பள உயர்வு கோரி அடுத்த மாதம் 5ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.