டெல்லி : காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி சிறைபிடித்தது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 2 மீனவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது ஒன்றிய அரசு.
The post காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் appeared first on Dinakaran.