முசாபர்நகர்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த 31ம் தேதி நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். முர்முவின் உரை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “ஒரே விஷயத்தை திரும்ப, திரும்ப படித்ததால் உரையின் இறுதியில் முர்மு சோர்வடைந்து விட்டது போல் தெரிகிறது” என பேசியதாக கூறப்படுகிறது. சோனியா காந்தியின் பேச்சுக்கு குடியரசு தலைவர் மாளிகை மறுப்பும், கண்டனமும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முர்மு குறித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் சோனியா காந்திக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முசாபர்பூரை சேர்ந்த வழக்கறிஞர் கதிர் ஓஜா தாக்கல் செய்துள்ள மனுவில், “நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பை அவமதித்த சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல், பிரியங்கா காந்தி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த மனு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
The post குடியரசு தலைவர் உரை பற்றி சர்ச்சை பேச்சு சோனியா காந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு appeared first on Dinakaran.