சோமனூர்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை கருமத்தம்பட்டியில் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீசார் சோதனை ெசய்ததில் கணக்கில் வராத ரூ.2.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர், நேற்று கருமத்தம்பட்டி பகுதியில் ஒதுக்குப்புறமாக ஸ்கூட்டரில் நின்று லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நாகராஜை பிடித்து விசாரித்தனர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதவிர, ஸ்கூட்டரில் சுமார் 1000 எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாகராஜை கைது செய்த போலீசார், சென்னியாண்டவர் கோவில் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்ட போது கணக்கில் வராத ரூ.2.25 கோடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை போலீசார் செய்தனர்.
The post கேரள லாட்டரி விற்றவர் கைது; வீட்டில் ₹2.25 கோடி சிக்கியது appeared first on Dinakaran.