புதுடெல்லி: கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியான ஜாய்மல்யா பக்ச்சியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்நீதிமன்ற கொலிஜியம் கடந்த 6ம் தேதி பரிந்துரை செய்தது. இதைஏற்று அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய நியமனத்தை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதியாக 6 ஆண்டுகள் பதவி வகிக்க இருக்கும் அவர் சில மாதங்களுக்கு தலைமை நீதிபதி பொறுப்பையும் வகிப்பார். வரும் 2031 மே 25ம் தேதி நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஓய்வு பெறுவார்.அதன் பிறகு 2031 அக்டோபர் 2ம் தேதி ஓய்வு பெறும் வரை தலைமை நீதிபதி பதவியில் பக்ச்சி இருப்பார்.
The post கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் appeared first on Dinakaran.