முங்கோலி: சட்டீஸ்கர் மாநிலம் முங்கோலி மாவட்டம் சர்கான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராம்போட் என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான எக்கு உருக்காலை அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை(9ம் தேதி) 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய பொருள்களை போட்டு வைக்க பயன்படும் இரும்பால் செய்யப்பட்ட சிலோ என்ற மிக பிரம்மாண்ட களஞ்சியம் போன்ற அமைப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
அப்போது பணியில் இருந்த மனோஜ் குமார் த்ரிட்லாஹ்ரே(35) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமார் 42 மணி நேரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் சிலோ இடிந்த விபத்தில் மேலும் 3 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
The post சட்டீஸ்கர் உருக்காலை இடிந்து 4 பேர் பலி appeared first on Dinakaran.