ஷாருக்கான், நயன்தாரா நடித்த 'ஜவான்' படம் மூலம் இந்திக்குச் சென்றார் இயக்குநர் அட்லி. இந்தப் படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அவர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. பீரியட் படமான இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க, ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனிடம் பேசிவருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் இதில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இந்தப் படம் பட்ஜெட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.