சூரத்: தாதர்-போர்பந்தர் சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத்தின் போர்பந்தர் நோக்கி நேற்று பிற்பகல் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் சூரத் அருகே கிம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் தடம் புரண்டது. இன்ஜினுக்கு அடுத்துள்ள பயணிகள் இல்லாத பெட்டிதடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எந்த பயணிக்கோ அல்லது ரயில்வே ஊழியர்களுக்கோ எந்தவித காயமும் ஏற்படவில்லை. லூப் லைன் இருந்ததால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை.
The post சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.