துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியை 264 ரன்களுக்கு ஆல் அவுட் செய்துள்ளது இந்தியா.
துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் பலம் பேட்டிங்தான். அதன் காரணமாக இந்த முடிவை ஆஸ்திரேலியா எடுத்தது.