கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், 'ஒத்த ஓட்டு முத்தையா'. அரசியல் நையாண்டி படமான இதை நடிகரும் இயக்குநருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு, ராஜேஸ்வரி, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். சினி கிராஃப்ட் புரொடக் ஷன் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் சார்பில் எம்.ஈ. ரவிராஜா, கோவை லட்சுமி ராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.