சென்னை: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. www.umang.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 4, 2025 அன்று முடிவடைந்தது. மொத்தம் 19299 பள்ளிகளில் 7330 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 16,92,794 பேர் தேர்வினை எழுதினார்கள் அதில் 14,96,307 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் cbseresults.nic.in., results.cbse.nic.in., cbse.gov.in.. results.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டைவிட 0.41% அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகள் 91%க்கு மேல் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 99.60% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சமாக பிரயாக்ராஜ் மண்டலத்தில் 79.53% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜயவாடா 99.60 சதவீதம், திருவனந்தபுரம் 99.32%, சென்னை 97.39%, பெங்களுரு 95.95%, டெல்லி மேற்கு 95.37%, டெல்லி கிழக்கு 95.06%, சண்டிகர் 91.61%, பஞ்சகைலா 91.17%, புனே 90.93%, அஜ்மீர் 90.40%, புவனேஸ்வர் 83.64%, கவுகாத்தி 83.62%, டேராடூன் 83.45%, பாட்னா 82.86%, போபால் 82.46%. நொய்டா 81.29% பிரயாக்ராஜ் மண்டலத்தில் 79.53% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
The post சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையில் 97.39 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.