டெல்லி: சிபிஎஸ்இ 7-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர் சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., பல திருத்தங்களை செய்து வெளியிட்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கைப்படி பல திருத்தங்களை செய்து சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை வெளியிடப்படுகின்றன.
முகலாயர், சுல்தான் பாடங்களுக்கு பதில் மகதா, மவுரியா உள்ளிட்ட பண்டைய இந்திய சாம்ராஜ்யங்கள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு புத்தகத்தில் உ.பி. கும்பமேளா குறுத்தும் மேக் இன் இந்தியா திட்டம் குறுத்தும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. சிபிஎஸ்இ பள்ளி புத்தகத்தில் இருந்து முகலாயர், சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The post சிபிஎஸ்இ 7-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர் சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கம் appeared first on Dinakaran.