புதுடெல்லி: சிபிஐ பதிவு செய்த புதிய வழக்கை ரத்து செய்யக் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவை ஆகஸ்ட் 4ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு, ஸ்காட்லாந்தை சேர்ந்த டியாஜியோ மதுபான நிறுவனம் இந்தியாவில் சுங்கவரி இன்றி மதுபானம் விற்பனை செய்வதற்கான உரிமையை பெற்றுத்தர கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் இதற்காக சந்தேகப்படும் வகையில் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது எம்பி கார்த்தி சிதம்பரம் மீதான 4வது வழக்கு. இந்த வழக்கு பெரும் தாமதத்துடன் பதிவு செய்யப்பட்டதாகவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கார்த்தி சிதம்பரம் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ரவீந்தர் துடேஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞரால் வர முடியவில்லை என்பதால் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற கார்த்தி சிதம்பரம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post சிபிஐ வழக்கை ரத்து செய்ய கோரிய கார்த்தி சிதம்பரம் மனு ஆக.4க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.