சென்னை: சிறை கைதிகள் தயாரித்த பொருள் விற்பனையில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்ட முகாந்திரம் இருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளது. சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.14 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி. அதிகாரிகள் தவறு செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
The post சிறை கைதிகள் தயாரித்த பொருள் விற்பனையில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.