வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது.
நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் க்ரூ-9 மிஷனுக்கான விண்கலம் மூலம் பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது.