சூரி நடிப்பில் உருவாகும் ‘மண்டாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘மாமன்’ பணிகளை முடித்துவிட்டதால், அடுத்ததாக ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூரி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.