புதுடெல்லி: எந்தவொரு சைபர் அச்சுறுத்தல்களையும் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வர்த்தக உறுப்பினர்களுக்கு மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில், “ரான்சம்வேர், விநியோகச் சங்கிலி ஊடுருவல், டிடிஓஎஸ் தாக்குதல், வலைத்தள சிதைப்பு, மால்வேர் போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சைபர் தாக்குதல்கள் குறித்து சந்தை பங்கேற்பாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற இடர்பாடுகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்.