புதுடெல்லி: கலை, கலாச்சாரம், துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகிய 7 பிரிவுகளில் சிறப்பான சாதனைகளை புரிந்த குழந்தைகளுக்கு ஒன்றிய அரசு பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதை வழங்குகிறது. இந்த ஆண்டு 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 10 சிறுமிகள் உட்பட 17 குழந்தைகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை விருதுகளை வழங்க உள்ளார். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், சான்றிதழ், பாராட்டுப்பத்திரம் வழங்கப்படும்.
The post ஜனாதிபதி நாளை வழங்குகிறார் 17 சிறுவர்களுக்கு பால புரஸ்கார் விருது appeared first on Dinakaran.