மெந்தர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் பலோனி பகுதியில் இருந்து 18 ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு ராணுவ வாகனம் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பனோய் நோக்கி சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் மெந்தர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையை விட்டு விலகி அங்கிருந்த 350 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் 350 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 வீரர்கள் பலி appeared first on Dinakaran.