ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை நடுவானிலேயே இந்தியா வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. இந்தியா மீதான பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் மீண்டும் முறியடித்துள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்முவில் கிஷ்த்வார் என்ற பகுதியில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டுவருகிறது.
ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா மற்றும் அண்டை பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவை அனைத்தும் S400 ஆல் இடைமறித்து அழிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் அவசரகால சைரன் ஒலிப்படுகிறது. முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
ஜம்மு மற்றும் ராஜஸ்தானின் எல்லையோரங்களில் இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திவருகிறது. இந்திய எல்லையில் நடைபெறும் தாக்குதளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துவருகிறது. பாகிஸ்தான் விமானப்படையின் எப் – 16 ரக விமானம் உள்பட 3 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
The post ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை நடுவானிலேயே இந்தியா வழிமறித்து தாக்கி அழிப்பு appeared first on Dinakaran.