டெல்லி: பாப் கார்ன் வரி விதிப்பு கேலிக்கு ஆளாகி இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்; ஜிஎஸ்டியின் கீழ் பாப் கார்னுக்கு 3 வெவ்வேறு விதங்களில் வரி விதிப்பது அபத்தமானது என சாடியுள்ளார். இது எளிமையான வரியாக கருதப்பட்ட ஜிஎஸ்டியின் அதிகரித்து வரும் சிக்கல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என்றும், ஜிஎஸ்டி உளவு இயக்குனரகம் சமீபத்தில் வெளியிட்ட வரி மோசடி குறித்த தரவுகளின் படி நடப்பு நிதியாண்டில் 2.01 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று எந்த வர்த்தகத்திலும் ஈடுபடாமல் உள்ளீட்டு வரி திரும்ப பெறுதலுக்காக மட்டுமே போலி நிறுவனங்கள் உருவாக்குவது பரவலாகி வருகிறது என்று குற்றச்சாட்டியுள்ளார். விநியோக சங்கிலிகளின் கண்காணிப்பு பலவீனமாக உள்ளதாக கூறிய அவர் பதிவு செயல்முறை குறைபாடுகளை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அடியோடு மாற்றியமைக்க மோடிக்கு தைரியம் உண்டா? என்றும் ஜெய்ராம் ரமேஷ் வினவியுள்ளார்.
The post ஜிஎஸ்டியின் கீழ் பாப் கார்னுக்கு 3 வெவ்வேறு விதங்களில் வரி விதிப்பது அபத்தம்: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் appeared first on Dinakaran.