சென்னை: கடந்த ஜனவரியில் சீனாவின் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் உலக அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து Manus எனும் ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி உள்ளது. வழக்கமான ஏஐ சாட்பாட்டுக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.
உலகில் ஏஐ நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தான் மகா சக்தி படைத்த நாடுகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் அமெரிக்கா, சீனா இடையே கடுமையான போட்டி நிலவும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி வெளிவந்தது. தொடர்ந்து கூகுளின் Gemini, எக்ஸ் தளத்தின் Grok என ஏஐ சாட்பாட்களின் பட்டியல் நீண்டது.