பாட்னா: பீகாரை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்)கட்சி தலைவராக உள்ளார். இவரது கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜிதன் ராம் அக்கட்சியின் ஒரே எம்பி ஆவார். பீகாரில் இந்தாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்,முங்கரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜிதன்ராம் கலந்து கொண்டு பேசுகையில்,‘‘ஜார்க்கண்ட்,டெல்லி சட்ட பேரவை தேர்தல்களில் எச்ஏஎம் கட்சிக்கு தேஜ கூட்டணியில் சீட் ஒதுக்கவில்லை. நான் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
இது தான் நியாயமா? அந்த மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு பலம் இல்லை என்று கூறுகின்றனர். இதற்காக என்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன். பீகாரில் எங்கள் பலத்தை நிரூபிப்போம். தேஜ கூட்டணிக்குள் நான் மோதலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் மோடி தலைமையிலான தேஜ கூட்டணியில் போர்க்கொடி தூக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த விஷயம் குறித்து கோரிக்கை தான் விடுக்கிறேன். இதில் மோதல் எதுவும் இல்லை. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசு பல்வேறு நல்ல விஷயங்களை செய்துள்ளது. ஆனால்,தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை’’ என்றார்.
The post டெல்லி பேரவை தேர்தலில் கட்சிக்கு பாஜ சீட் ஒதுக்காததால் அதிருப்தி ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலக போவதாக ஜிதன் ராம் மாஞ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.