புதுடெல்லி: இதுகுறித்து டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில், “டெல்லி மக்கள் வாக்களிப்பதை தடுக்க பாஜ மிகப்பெரிய அளவில் சதி செய்கிறது. டெல்லியின் பல இடங்களில் உள்ள என்னை தொலைபேசியில் அழைத்தனர். அப்போது, 5ம் தேதி நீங்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு போக வேண்டாம். வீட்டிலிருந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் வசதி செய்துள்ளது.
உங்கள் வாக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உங்கள் வீடு தேடி வந்து, உங்கள் விரல்களில் மை வைக்கும் என பாஜ சொல்கிறது என அந்த மக்கள் கூறினர். இதற்காக வாக்காளர்களுக்கு 3000 ரூபாயையும் பாஜ தருகிறது. டெல்லி தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தடுக்க பாஜ பெரியளவில் சதி செய்கிறது” என குற்றம்சாட்டி உள்ளார்.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியினர் மீது பாஜவினர் தாக்குதல் நடத்துவதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், “ஆம் ஆத்மி தொண்டர்களை தாக்கிய பாஜவினர் மீது உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் புதுடெல்லி தொகுதிக்கு தனியாக தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
The post டெல்லி மக்கள் வாக்களிப்பதை தடுக்க பாஜ சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.