டெல்லி: டெல்லியில் இன்று ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை செயலர் பங்கஜ் அகர்வால், இ.ஆ.ப., மற்றும் நிலக்கரி துறை செயலர் விக்ரம் தேவ் தத், இ.ஆ.ப., ஆகியோருடன் இணை கூட்டுக்குழு கூட்டம் ஷரம் சக்தி பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் / தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்துக்கு வழங்கிய சந்திரப்பிலா நிலக்கரி சுரங்கத்தை ஒப்படைத்தது குறித்தும் அதற்குரிய டெபாசிட் தொகையினை திரும்ப வழங்கவும் எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாட்டில் வரும் கோடை காலங்களில் மின்சார விநியோகத்தை சமாளிப்பதற்காக மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக 3000 மெகாவாட் மின்சாரம் வழங்க கோரியும் கோரிக்கை வைத்தார். குறுகிய காலத்திற்கு மின் ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத் திட்டங்களுக்கு நிதி வழங்கி வரும் பவர் பைனான்ஸ் கார்பொரேஷன் லிமிடெட் (PFC), ஊரக மின்மயமாக்கல் கழக நிறுவனம் (REC) ஆகிய நிறுவனங்களின் அலுவலர்களை சந்தித்து, திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியினை விரைந்து வழங்குமாறும் வலியுறுத்திள்ளார். இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை செயலர் பங்கஜ் அகர்வால், இ.ஆ.ப., அவர்கள் , நிலக்கரி துறை செயலர் விக்ரம் தேவ் தத், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் உத்திர பிரதேச மாநில எரிசக்தித்துறை கூடுதல் தலைமை செயலர் நரேந்திர பூஷன், இ.ஆ.ப., உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post டெல்லியில் ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை இணை கூட்டுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!! appeared first on Dinakaran.