டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் தாமதமாக வந்ததாக விமான நிலைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்தனர். டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. டெல்லியில் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11°செல்சியசாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
The post டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு.! தாமதமாக வந்த விமானங்கள் appeared first on Dinakaran.