இந்திய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். தொலைத்தொடர்பு துறை கடந்த 7ம் தேதி ஆபரேட்டர்களுடன் கூட்டத்தை நடத்தியது. இதில் தேசிய அளவிலான கட்டுப்பாட்டு மையங்களை நிறுவுவதற்கும், தொடர்ச்சியான நெட்வொர்க் சேவை மற்றும் அனைத்து நேரங்களிலும் நெருக்கமான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நெட்வொர்க்குகளை 24மணி நேரமும் கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதாக அரசிற்கு முழு உறுதிப்பாட்டை வழங்கின.
The post தடையற்ற தொலைத்தொடர்புக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.