சென்னை: “சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கி உள்ள பிஹார் மாநிலத்துக்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். தமிழக அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி குறித்த அறிவிப்புகள் இல்லை. மத்திய நிதி நிலை அறிக்கை ஒட்டு மொத்தமாக ஏமாற்றத்தையே தருகிறது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மந்தமான பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற நெருக்கடிகளுக்கு இடையில் தாக்கல் செய்து இருக்கிறார்.