டெல்லி: தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன் என வைகோ தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வைகோ ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் ஓய்வுபெறும் நாளில் மாநிலங்களவையில் பேசிய வைகோ; என்னை முதன்முதலாக மாநிலங்களவை அனுப்பிய கலைஞருக்கு நன்றி. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறனால் வார்த்தெடுக்கப்பட்டேன்.
சோனியா காந்தி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரது உரைகளை கேட்க வாய்ப்பு கிடைத்தது. ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். என்.எல்.சி.யை தனியார் மயமாக்காமல் தடுத்திருக்கிறேன். தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன் என்று கூறினார்.
The post தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்: மாநிலங்களவையில் வைகோ உரை appeared first on Dinakaran.